21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்த விருது!
21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு ‘திருமதி உலக அழகி’ பட்டத்தை இந்தியப்பெண்னொருவர் தட்டிச்சென்றுள்ளார்.
‘திருமதி உலக அழகி’ (மிஸஸ் வேர்ல்டு) என்ற போட்டி, கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான இப்போட்டி, அமெரிக்காவில் வெஸ்ட்கேட் லாஸ் வேகாஸ் ரிசார்ட் என்னும் சொகுசு விடுதியில் நடந்தது.
போட்டியில் 63 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். அந்தவையில் இந்தியா சார்பில், சர்கம் கவுசல் என்ற 32 வயது பெண், கலந்து கொண்டார். நேற்று போட்டியின் இறுதிச்சுற்று நடந்தது.
அதில், சர்கம் கவுசல் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார். அவருக்கு சென்ற ஆண்டுக்கான திருமதி உலக அழகி ஷாலின் போர்டு, கிரீடம் சூட்டினார்.
அப்போது, அரங்கம் அதிர கைதட்டல் எழுந்தது. அதேசமயம் 2-வது இடத்தை பாலினேசியா நாட்டு பெண்ணும், 3-வது இடத்தை கனடா அழகியும் பிடித்தனர்.
கடந்த 2001-ம் ஆண்டு திருமதி உலக அழகி பட்டத்தை இந்திய பெண் அதிதி கவுரிகர் வென்றார். 21 ஆண்டுகள் கழித்து, இந்த பட்டம் மீண்டும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.