இந்தியாவிடம் அதிக அளவு பணம் இருக்கிறது நாம் ஏன் கொடுக்க வேண்டும்? டிரம்ப் கேள்வி
இந்தியாவிடம் அதிக அளவு பணம் இருக்கிறது என்றும், அவ்வாறு இருக்கும் போது எதற்காக அமெரிக்கா 21 மில்லியன் டாலர் பணம் வழங்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபய் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை உலக நாடுகளில் அதிக வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியா ஒன்று எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய பொருளாதாரம் நல்ல அளவில் உள்ளது.
அங்கு நமக்கான வரி அதிகம் உள்ளதால், நாம் அங்கு செல்வது எளிதாக இல்லை. அதேவேளை பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்.
ஆனால், இந்தியாவில் வாக்காளர்கள் சதவீதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் டாலரை வழங்க வேண்டும்? இந்தியாவிடம் ஏற்கனவே அதிக அளவில் பணம் இருக்கிறது எனவே, அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஏற்கனவே அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் எலான் மஸ்க் அதிரடியாக பல முடிவுகளை எடுத்து வரும் நிலையில், அவருடைய ஆலோசனையின் படிதான் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.