உலகின் 4ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், ஜப்பானை பின் தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.
இதற்கமைய 4.18 டிரில்லியன் அமெரிக்க டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன்,ஜப்பான் 5ஆவது இடத்தில் உள்ளதுடன், இந்தியா 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், 2030ஆம் ஆண்டுக்குள் 3ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியை பின் தள்ளி, இந்தியா 3ஆவது இடத்திற்கு முன்னேறும் என இந்திய மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பொருளாதார ரீதியில் தற்போது இந்தியா வேகமாக வளர்ந்து வருவதுடன், நடப்பாண்டின் 2ஆவது காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் இந்திய மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.