நீடிக்கும் முறுகல் நிலை; கனேடியர்களின் விசாவை நிறுத்திய இந்தியா!
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்தியா செல்லும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு கனடா அரசாங்கம் கூறியுள்ளது.
அதேபோல், கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா தரப்பிலும் எச்சரிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கனடா நாட்டவருக்கு இந்தியா வருவதற்கான, விசா வழங்கும் பணியை இந்தியா தூதரகம் இன்று( செப்.,21) முதல் அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேலும் சில நடைமுறை சிக்கல் காரணமாக கனடியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.