வெளிநாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தியர்
ஆஸ்திரேலியாவில் வம்சாவளி இந்தியர் ஹர்மன்பிரீத் சிங் 22, மீது கொடூரமான இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஹர்மன்பிரீத் சிங் 22, வம்சாவளி இந்தியர் செவிலியராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கீலாங்கின் கோரியோவில் உள்ள ஜிம்மிற்கு சென்றார்.

ஜிம்மிற்குள் இருந்த 3 நபர்கள் ஹர்மன்பிரித் சிங்கிடம் தகராறில் ஈடுபட்டு இனவெறியுடன் வாய்தகராறில் ஈடுபட்டனர். பின்னர் ஹர்மன்பிரித் சிங் ஜிம்மைவிட்டு வெளியே வந்தபோது அவர்கள் அவரை வழிமறித்தனர்.
மேலும் அந்த கும்பலில் இருந்த ஒருவன் அவரை 'இந்திய நாய்' என்று அழைத்து, 'நீ எங்கிருந்து வந்தாயோ அங்கேயே திரும்பிப் போ' என்று கூறி அவர் முகத்தில் கடுமையாகத் தாக்கினான்.
இந்தத் தாக்குதலில் ஹர்மன்பிரீத் சிங்கின் மூக்கு உடைந்து பலத்த ரத்தப்போக்கு ஏற்பட்டது. தற்போது அவர் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் சாம்பல் நிற காரில் தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவத்தால் தான் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், பாதுகாப்பற்ற உணர்வை அடைந்துள்ளதாகவும் ஹர்மன்பிரீத் சிங் ஹர்மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் பல மாதங்களாகத் தொடர்ந்தும், இந்திய புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.