ஓஹியோ தீ விபத்தில் இந்திய குடும்பம் பலி
அமெரிக்க விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குஜராத்தை சேர்ந்த தம்பதி, மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குஜராத்தின் கேடா மாவட்டத்தின் நதியாத் பகுதியை சேர்ந்தவர் ஹிதேஷ்பாய் சுதர். இவரது மனைவி ஹினா பென். இவர்களுக்கு இஷானி(20) என்ற மகள் உள்ளார்.

இவர்கள் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறினர்.ஒஹியோவில் உள்ள விடுதி ஒன்றில் ஹிதேஷ்பாய் சுதர் வேலைபார்த்து வந்தார். அங்கேயே குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
இந்த விடுதியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தீ அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.அப்போது ஹிதேஷ்பாய் சுதரும் குடும்பத்துடன், அறையில் சிக்கிக் கொண்டனர். தீயை அணைத்த பிறகு மீட்புப்படையினர் அங்கு சென்ற போது, மூவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தமை தெரிய வந்ததாக கூறப்படுகின்றது.