அமெரிக்கா பாஸ்டன் நகரில் மாயமான இந்திய மாணவி
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உயர்கல்வி பயின்று இந்தியாவை சேர்ந்த 23 வயதான மாணவி கோயா ஸ்ரீஜா ரெட்டி மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்.
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 1.5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்றுள்ளார்.

கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு பாஸ்டனின் டார்செஸ்டர் பகுதியில் உள்ள தனது அறையிலிருந்து நடைப்பயிற்சி செல்லப் புறப்பட்ட ஸ்ரீஜா, அதன்பின் வீடு திரும்பவில்லை.
அவர் கடைசியாக கார்சன் பீச் அல்லது ஹார்பர் பாயிண்ட் பகுதியில் இருந்திருக்கலாம் என பாஸ்டன் காவல்துறை சந்தேகிக்கிறது.
பாஸ்டன் காவல்துறை மாணவியை தேட அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், பொதுமக்கள் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, தெலங்கானா அமைச்சர் கொமடிரெட்டி வெங்கட் ரெட்டி, இந்திய வெளியுறவு அமைச்சகம், பாஸ்டன் இந்திய தூதரகம் மற்றும் அமெரிக்க தெலுங்கு அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு மாணவியை விரைவாகக் கண்டுபிடிக்க உதவி கோரியுள்ளார்.