லெபனான் தாக்குதலில் இஸ்ரேலில் இந்தியர் பலி
லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் இஸ்ரேல் எல்லையில் உள்ள பகுதிகளை அடிக்கடி ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியில் தாக்கியது.
இந்த பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகிறார்கள். ஏவுகணை தாக்கியதில் ஏழு வெளிநாட்டு தொழிலாளர்கள் காயம் அடைந்த நிலையில், அதில் மூன்று பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.