நீண்டநாள் பகை... பழி தீர்க்கப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பம்: அமெரிக்காவில் சம்பவம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளி குடுபம் கடத்தி கொலை செய்யப்பட வழக்கில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியாவில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட இந்திய வம்சாவளி குடும்பத்தை துப்பாக்கி முனையில் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், குழந்தை உட்பட அந்த குடும்பத்தினர் இரண்டு நாட்கள் கழித்து தோட்டத்தில் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். குடும்பத்தினரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் கண்டதையடுத்து,
முக்கிய குற்றவாளி என கருதப்படும் Jesus Manuel Salgado என்பவரை பொலிஸார் கைது செய்தனர். விசாரணையில் குறித்த குடும்பத்தினர் முன்னெடுத்து வந்த தொழிலில் இணைந்து பணியாற்றிய முன்னாள் ஊழியர் என்பதும், அவருக்கும் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கும் நீண்டகால தகராறு இருந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில், திங்களன்று துப்பாக்கி முனையில் 8 மாத குழந்தை, அவருடைய பெற்றோர் மற்றும் அவரது மாமா உள்ளிட்டவர்களை கடத்திச் சென்று அவர்களைக் கொன்றுவிட்டு, அவர்களின் உடல்களை ஒரு பாதாம் தோட்டத்தில் விட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சல்காடோவின் கூட்டாளியாக செயல்பட்ட மற்றோரு சந்தேக நபரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர் என்று ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.