அமெரிக்காவில் கள்ளக் காதலிக்காக இந்தியர் செய்த கொடூரம்; பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
அமெரிக்காவில் தெலுங்கானாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது மனைவியை கொன்று கள்ளக்காதலிக்கு போட்டோ அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அவினாஷ் நார்னே (30). இவர் அமெரிக்காவின் பெலிவி நகரில் சாப்ட்வேர் டெவலப்பராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி ராஜிதா சப்பினேனி (27) .

பிரேத பரிசோதையில் திடுக்கிடும் தகவல்
கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென பெலிவி போலீஸ் நிலையத்திற்கு போன் செய்த அனினாஷ், அழுதுகொண்டே தான் வெளியே சென்று வீட்டிற்கு வந்துபோது மனைவி கழிவறை கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு,, எவ்வளவு அழைத்தும் திறக்கவில்லை என்றும் கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ராஜிதா சப்பினேனி அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். ராஜிதா சப்பினேனியின் உடலை பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைத்த நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ராஜிதா சப்பினேனி கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்தார் என பிரேத ப்ரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அறிந்த போலீசார் அவினாஷ் நார்னேவை பிடித்து விசாரணை நடத்தியபோது தனது மனைவியை கொலை செய்ததை அவினாஷ் ஒப்புக்கொண்டுள்ளார்.
அவினாஷிற்கு திருமணத்திற்கு முன்பே இந்தியாவில் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை மறைத்தே அவர் ராஜிதாவை திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து அமெரிக்கா வந்த பிறகும் அவினாஷ் தனது காதலியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.
காதலியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, தன் மனைவி ராஜிதாவை திட்டமிட்டு கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, போலீசாரிடம் நாடகமாடியது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாது மனைவியை கொலை செய்த உடனே, அவரது உடலை மொபைல் போனில் புகைப்படம் எடுத்து இந்தியாவில் இருக்கும் தனது கள்ளக்காதலிக்கு அவினாஷ் அனுப்பி உள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவினாஷ் நார்னே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக அமெரிக்க சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.