கியூபெக்கில் மாயமான பெண் சடலமாக கண்டெடுப்பு: ஒருவர் கைது
கனடாவில் பெண்ணொருவர் மாயமான நிலையில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Lévis நகரில், சுஷ்மிதா பாஸ்கரன் (51) என்னும் பெண் காணாமல் போனதாக கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 22ஆம் திகதி பொலிசாருக்கு புகாரளிக்கப்பட்டுள்ளது.

கியூபெக் மற்றும் Lévis பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், வனப்பகுதி ஒன்றில் பெண்ணொருவரின் உயிரற்ற உடல் கிடப்பது தெரியவந்தது.
Lévisஇலுள்ள வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் சுஷ்மிதாவுடையதுதான் என்பதை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மார்ட்டின் கேரியர் (61) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.