கனடாவில் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய இளைஞர்
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்டன் நகரில் இந்திய இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விடயம் அப்பகுதியில் வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
நேற்று, ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி, மதியம் 1.09 மணியளவில், பிராம்டன் நகரில், பஞ்சாபைச் சேர்ந்த ஜக்மீத் (Jagmeet (Jack) Mundi) என்னும் இளைஞரை, பிராம்டன் பிளாசாவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினரால் அவரைக் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது. சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் ஜக்மீத்.
மக்கள் பரபரப்பாக இயங்கும் ஒரு இடத்தில் வைத்து இந்திய இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள விடயம் அப்பகுதியில் வாழும் இந்தியர்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஜக்மீத்தை சுட்டுக்கொன்றவர்கள் தப்பியோடிவிட்ட நிலையில், அவர்களை தீவிரமாகத் தேடிவரும் பொலிசார், அவர்களைக் குறித்த தகவல்கள் தொடர்பில் மக்களுடைய உதவியை நாடியுள்ளார்கள்.