40 மில்லியன் டொலர் லொத்தர் பரிசு வென்ற ஒஷாவா முதியவர்
ஒஷாவாவை சேர்ந்த 79 வயதான பெர்னார்ட் வைட் என்ற முதியவர் லொட்டோ மெக்ஸ் Lotto Max Jackpotல் 40 மில்லியன் டொலர் வென்றுள்ளார்.
இந்த விடயத்தை கேட்டதும், மகிழ்ச்சியில் மிதந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த மகிழ்ச்சியை அறிவித்த தருணம் ஒரு நினைவில் நிலைத்திருக்கும் சம்பவமாக அமைந்தது.
பெப்ரவரி 21ஆம் திகதி நடைபெற்ற Lotto Max சீட்டிலுப்பில் வெற்றி பெற்றது குறித்து அவரது மகள் முதலில் தெரியப்படுத்தியபோது, பெர்னார்ட் தன் வெற்றியை 40,000 டொலர்கள் என நினைத்தாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் பத்து நிமிடங்கள் கழித்து, அவரது மகள் மீண்டும் கதவை தட்டினாள் வெற்றி பெற்ற தொகை 40 மில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நியூஃபவுண்ட்லாந்தை சேர்ந்த பெர்னார்ட், 2009 முதல் Lotto Max டிக்கெட்டுகள் வாங்கி வருகிறார்.
அண்மைக் காலமாக, அவர் தன் மகளுக்கும் தனக்கும் இரண்டு டிக்கெட்டுகள் கொள்வனவு செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
40 மில்லியன் டொலரை வென்ற பிறகு, பெர்னார்ட் முதலில் $3,000 மதிப்புள்ள ஒரு பிரமாண்ட ஆடியோ ஸ்பீக்கர் வாங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினருடன் பணத்தை பகிர்ந்துகொள்வதே பெரிய கனவு என பெர்னாட் தெரிவித்துள்ளார்.