கனடாவில் ஒரு வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்
கனடாவில் ஒரு வயதான சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஒண்டாரியோ மாகாண காவல்துறையினரின் தகவலின்படி, ஒரு வயது சிறுமி ஒருவர் வெள்ளிக்கிழமை காலை ஸெயிண்ட் லாரன்ஸ் ஆற்றில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் கிங்ஸ்டனுக்கு தெற்கில் உள்ள உல்ஃப் தீவில் அமைந்துள்ள ஸ்டோனி பொயிண்ட் லேன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து காலை 9.30 மணி அளவில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய குழந்தை சலனமற்றிருந்த நிலையில் குடும்பத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதையடுத்து அந்த சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“துயரத்தில் உள்ள குடும்பத்தின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக, அந்த சிறுமியின் விவரங்கள் வெளியிடப்படமாட்டாது,” என ஒன்றாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான பிரச்சினைகள் எதுவும் கிடையாது எனவும், இது ஒரு துயரமான விபத்து என்று சந்தேகிக்கப்படுகிறது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.