ரஷ்ய விமானத் தளத்தில் தாக்குதல் நடத்திய உக்ரைன்
உக்ரைன் மீதான தனது தீவிர வான்வழித் தாக்குதலை ரஷ்யா தொடா்ந்துவரும் சூழலில், ரஷ்ய விமானத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் இராணுவ உயரதிகாரிகள் வெளியிட்ட பதிவில்,
ரஷ்யாவின் போரிசோகிளெப்ஸ்க் விமான தளத்தைத் தாக்கியதாகவும், பல போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனா்.
இந்தத் தாக்குதலில் கிளைடு குண்டுகள், பயிற்சி விமானம் மற்றும் பிற விமானங்கள் உள்ள கிடங்கு பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இருந்தாலும், இதுகுறித்து ரஷ்ய அதிகாரிகள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.