ஈரானின் புதிய ஆட்சியாளர் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது ; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
ஈரானின் புதிய ஆட்சியாளர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது'' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி இருப்பதாவது: ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு நடவடிக்கை எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது.

இறுதி முடிவு
இஸ்ரேல் எப்போதையும் விட வலிமையாக உள்ளது. ஈரானின் புதிய ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
ஈரான் மக்கள் அந்த கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதற்கான சூழலை உருவாக்குவதற்காகவே அமெரிக்காவும், இஸ்ரேலும் செயல்பட்டு வருகிறது. மேலும் நாங்கள் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்.
ஈரான் மக்கள் சுதந்திரம் நோக்கிய ஒரு புதிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்கான அந்தத் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம், உங்களுக்கு உதவி வருகிறோம். ஆனால் இறுதியில் முடிவு எடுப்பது உங்கள் கைகளிலேயே உள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.