வெளிநாடொன்றில் கோர விபத்தில் நான்கு குழந்தைகளை இழந்த இந்திய பெற்றோர்
அபுதாபியில் இந்திய குடும்பம் ஒன்று , வாகன விபத்தில் 4 ஆண் குழந்தைகளை இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்த குழந்தைகள் பெற்றோருடன் அபுதாபிக்கு சுற்றுலா சென்ற நிலையில் இந்த துரம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப். துபாயில் பணியாற்றி வரும் அப்துல், தனது மனைவி ருக்சானா மற்றும் 5 குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையை கழிக்க, அப்துல் தனது குடும்பத்தினரோடு அபுதாபி சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பும்போது, அவர்கள் பயணம் செய்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அப்துலின் ஆண் குழந்தைகள் அஷாஸ் (14 வயது), அம்மார் (12 வயது), அஸாம் (7 வயது), அயாஷ் (5 வயது) ஆகிய 4 பேரும், அவர்களுடன் பயணித்த வீட்டு பணியாளர் புஷ்ரா (49 வயது) என்ற கேரள பெண்ணும் உயிரிழந்தனர்.
மேலும் அப்துல், அவரது மனைவி ருக்சானா மற்றும் அவர்களது பெண் குழந்தை மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.