வரலாற்றுச் சாதனையை புரிந்த இந்திய வீராங்கனை.!

Indian Tokyo Bhavina Patel Paralympic Silver medal
By Shankar Aug 29, 2021 04:19 AM GMT
Shankar

Shankar

Report

டோக்கியோ பாராலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு (கிளாஸ் 4 பிரிவு) ஆட்டத்தில் பிரேஸிலின் ஒலிவேரியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய வீராங்கனை பவினா படேல் காலிறுதிக்கு நுழைந்தார்.

வரலாற்றுச் சாதனையை புரிந்த இந்திய வீராங்கனை.! | Indian Player Who Understood The Historical Record

அதனை தொடர்ந்து, நடந்த காலிறுதிச் சுற்றில் உலக தரவரிசையில் இரண்டாவது இடத்தில உள்ள செர்பியாவின் போரிஸ்லவா வீராங்கனையுடன் மோதினார். இதில், 3-0 என வீழ்த்திய இந்திய வீராங்கனை பவினா படேல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த காலிறுதி ஆட்டத்தில் 18 நிமிடங்களில் 11-5, 11-6, 11-7 என்ற கணக்கில் அபாரமாக ஆடி இந்திய வீராங்கனை அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகியது.

நேற்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில், சீனாவின் மியாவோ ஜாங்குக்கு எதிராக விளையாடிய பவினா பட்டேல், 3-2 என்ற செட் கணக்கில் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

வரலாற்றுச் சாதனையை புரிந்த இந்திய வீராங்கனை.! | Indian Player Who Understood The Historical Record

இதன் மூலம் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பாரா ஒலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்கிற பெருமையையும், நாளை இறுதி போட்டியில் விளையாடும் வரலாற்றுச் சாதனையும் பவினா படேல் பெற்றார்.

இந்நிலையில், இன்று காலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் தோல்வியை சந்தித்தார். சீன வீராங்கனையிடம் 3-0 செட் கணக்கில் போராடி தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.

இதன் மூலம் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இறுதி போட்டியில் கலந்துகொண்ட முதல் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தையும், இந்த பிரிவில் முதல் வெள்ளி பதக்கm வெல்லும் வரலாற்றுச் சாதனையையும் புரிந்துள்ளார்.

மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US