கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட இந்தியருக்கு தண்டனை
கனடாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில், கனடாவுடனான எல்லையை கடந்து இந்திய குடிமக்களை சட்டவிரோதமாக நுழைய உதவியதாக 27 வயதான இந்தியரான ரஜத் ரஜத் என்பவருக்கு ஐந்து மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதிமன்றினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023 நவம்பர் 27ஆம் திகதி, கனடாவின் பீஸ் ஆர்ச் எல்லைக்கு அருகிலுள்ள எல்லைக் கிராம குடியிருப்பு பகுதியில் இருந்து அமெரிக்காவிற்கு ஆட்கள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஜத் அவர்களுக்கு எல்லையை எவ்வாறு கடக்கலாம் என வழிகாட்டி, பணம் வசூலித்து, மினிவேன் ஓட்டுநருக்கு பணம் கொடுத்து ஏற்பாடு செய்ததாக கைதானவர்கள் வாக்கு மூலம் வழங்கியுள்ளனர்.
ரஜத் என்பவர் இந்தியர்கள் கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியை எவ்வாறு கடப்பது என்பது குறித்து பல இந்தியவர்களுக்கு வழிகாட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.