அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவன்; தந்தைக்கு விடுக்கப்பட்ட மிரட்டலால் அச்சத்தில் குடும்பத்தினர்!
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய மாணவனின் சிறுநீரகத்தை விற்பனை செய்யப்போவதாக அச்சுறுத்த விடுத்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கடந்த்தப்பட்ட , மாணவனின் தந்தை சலீம் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில்,
மேற்படிப்புக்காக சென்ற முகமது அப்துல்
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்தவர் முகமது அப்துல். 25 வயதான இவர் என்ஜினீயரிங் மேற்படிப்புக்காக கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா சென்றார். அங்கு அவர் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதியில் இருந்து அப்துல், ஐதராபாத்தில் உள்ள தனது பெற்றோரை தொடர்பு கொள்ளவில்லை என தெரிகிறது.
அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது 'சுவிட்ச்ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த அப்துலின் தந்தை முகமது சலீம், அமெரிக்காவில் அப்துலுடன் தங்கியிருக்கும் அவருடைய நண்பர்களை தொடர்பு கொண்டு பேசினார்.
தந்தைக்கு அச்சுறுத்தல்
அப்போது அவர்கள் 7-ந் தேதி அப்துலை காணவில்லை என்றும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினர்.
இந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி , அப்துலின் தந்தை சலீம் செல்போனுக்கு அமெரிக்காவில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவன் என்றும், அப்துலை தாங்கள் கடத்தி வைத்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் அந்த நபர் அப்துலை விடுவிக்க வேண்டுமென்றால் 1,200 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1 லட்சம்) கொடுக்க வேண்டும், பணம் தராவிட்டால் அப்துலின் சிறுநீரகத்தை விற்றுவிடுவோம் என மிரட்டினார்.
அதே நபர் மீண்டும் நேற்று முன்தினம் மீண்டும் சலீமை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தங்கள் மகனைக் கண்டுபிடித்து பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அப்துலின் பெற்றோர் இந்திய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.