ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இந்திய மாணவன்... நண்பவர்கள் இருவர் அதிரடி கைது!
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெல்போர்னில் எம்.டெக் பட்டப்படிப்பு படித்து வந்த 22 வயதான அரியானா மாநிலம் கர்னாலில் உள்ள கக்சினா கிராமத்தை சேர்ந்த நவ்ஜீத் சந்து சில மாணவர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவருடன் தங்கியிருந்த அரியானாவை சேர்ந்த அபிஜித் (26), ராபின் கார்டன் (27) என்ற சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 5ம் திகதி அபிஜித்தும், ராபினும் சேர்ந்து நவ்ஜீத்தை கத்தியால் சரமாரியாக குத்தினர். அதைத்தடுக்க வந்த ஒருவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த விக்டோரியா போலீசார் விரைந்து சென்று நவ்ஜீத் சந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்த மாணவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அபிஜித், ராபின் கார்டனை பொலிஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரையும் நேற்றையதினம் (08-05-2024) பொலிஸார் கைது செய்தனர்.