நியூயார்க்கில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இந்திய பெண் உட்பட 2 பேர் பலி
நியூயார்க்கில் ரயில் விபத்தில் இந்திய வம்சாவளி பெண் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலாய்க்கா சித்ரே (24), அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியிலுள்ள டேடன் நகரில் வசித்து வந்தார்.

இவரும், நேபாளத்தைச் சேர்ந்த இவரது நண்பர் நவம்கவுலும் இங்குள்ள ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு அமெரிக்காவிலேயே தங்கி வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் லோயர் மன்ஹாட்டன் சப்வே ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளனர். ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது இருவரும் அந்த வழியே வந்த ரயில் மோதி அதே இடத்திலேயே இறந்தனர்.
பின்னர் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது ரயில் தண்டவாளத்தில் நவம் கவுல் தவறி விழுந்ததாகவும், இதைப் பார்த்த மலாய்க்கா சித்ரே அவரைக் காப்பாற்றச் சென்று விபத்தில் சிக்கியதாகவும் நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.