கனடா வேண்டாம்... இந்திய மாணவர்கள் கல்வி கற்க தேர்ந்தெடுத்துள்ள மற்றொரு நாடு
கனடா, சர்வதேச மாணவர்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருவதால், மாணவர்கள் வேறு நாடுகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பி வருகிறார்கள்.
கனடாவில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்களில் முக்கிய இடம்பிடித்துவந்தது இந்திய மற்றும் சீன மாணவர்கள்தான் என்பது பலரும் அறிந்த விடயம்தான்.
இந்நிலையில், இந்திய மாணவர்கள் கனடாவின் கட்டுப்பாடுகள் காரணமாக வேறு நாடுகள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பத் துவங்கியுள்ளார்கள்.
அவர்கள் தங்கள் விருப்ப நாடாகத் தேர்வு செய்துள்ள நாடு, அமெரிக்கா அல்ல, ஜேர்மனி!
ஆம், 2022இல் 13.2 சதவிகித இந்திய மாணவர்கள் ஜேர்மனியில் கல்வி கற்க விண்ணப்பித்த நிலையில், 2024, 25இல் ஜேர்மனியில் கல்வி கற்க விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 32.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்த இந்திய மாணவர்கள் எண்ணிக்கை, அதே காலகட்டத்தில் 17.85 சதவிகிதத்திலிருந்து 9.3 சதவிகிதமாக குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.