அமெரிக்காவில் இருந்து 6 மாதங்களில் நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டெனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் உள்பட பிற நாட்டை சேர்ந்தவர்கள் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டனர்.
இந்தியர்கள் கை விலங்கிட்டு நாடு கடத்தப்பட்டது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியாவுக்கு நாடு கடத்தல்
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 20-ந் திகதியில் இருந்து இம்மாதம் (ஜூலை) 15-ந் திகதி வரை அமெரிக்காவில் இருந்து இதுவரை 1,563 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் வணிக விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக செய்தி தொடர்பாளர் ரந்தீஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்து உள்ளார்.
மேலும் அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.