அமெரிக்காவில் வசிக்கும் மகள், மாமியாரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட இந்தியர்!
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் தனது 14 வயது மகள் மற்றும் மாமியாரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
அமெரிக்காவில் உள்ள அல்பானி நகர் அருகே இந்தியாவைச் சேர்ந்த பூபிந்தர் சிங் (57) என்பவர் அங்கு தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று பூபிந்தர் சிங் தனது வீட்டில் வைத்து மகள் ஜஸ்லீன் கவுர் (14) மற்றும் அவரது மாமியார் மன்ஜீத் கவுர் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, பின்னர் தன் மீதும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டில் இருந்து காப்பாற்றுவதற்காக வந்த ராஷ்பால் கவுர் என்ற பெண்ணின் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. தற்போது அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து நியூயார்க் மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.