பழங்குடியின மக்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர் - பாப்பாண்டவர்
கனடாவில் பழங்குடியின மக்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர் என பாப்பாண்டவர் முதலம் பிரான்ஸிஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
பழங்குடியின மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வதிவிடப்பாடசாலைகளுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாப்பாண்டவர் ஆறு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு கனடாவிற்கு பயணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு திரும்பும் முன்னதாக கனடாவில் வைத்து ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
றோமன் கத்தோலிக்க தேவாலயங்களினால் பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக அவர் பல தடவைகள் மன்னிப்பு கோரியுள்ளார்.
தேவாலயங்களின் சிலரினால் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக அவர் இவ்வாறு பல தடவைகள் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
இதேவேளை, பழங்குடியின சமூகத்தினர் எதிர்நோக்கிய துன்புறுத்தல்கள் பற்றிய விபரங்களை பாப்பாண்டவர் வெளியிடாமை குறித்து சில பழங்குடியின சமூகத்தினர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும், கத்தோலிக்க தேவாலயங்கள் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டதனை பாப்பாண்டவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.