கனடாவில் பணவீக்க வீதத்தில் ஏற்பட்ட சாதக மாற்றம்
கனடாவில் பணவீக்க வீதத்தில் சாதக மாற்றம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் வருடாந்த பணவீக்க வீதம் 2.7 வீதமாக பதிவாகியுள்ளது.
ஓராண்டு காலத்திற்கான ஒப்பீட்டின் அடிப்படையில் பணவீக்கத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருட்களின் விலைகள், நீடித்து நிலைக்கக்கூடிய பொருட்களுக்கான விலைகள் போன்றவற்றின் மாற்றத்தினால் பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த ஜூன் மாதத்தில் மளிகை பொருட்களுக்கான விலைகள் 2.1 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
ஓராண்டு கால ஒப்பீட்டின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மே மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது ஜூன் மாதத்தில் மளிகை பொருட்களின் விலை 1.5 வீதம் அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதம் ஆண்டு பணவீக்க வீதம் 2.9 வீதமாக காணப்பட்டதுடன் கடந்த ஜூன் மாதம் இது 2.7 வீதமாக குறைவடைந்துள்ளது.