உக்ரைன் - ரஷ்யா போரால் மற்றொரு நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்பு!
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ஹங்கேரியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை கண்டித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது வரலாறு காணாத பொருளாதார தடைகளை விதித்தன.
இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததோடு, ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில், ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.
ஹங்கேரியில் தற்போது பணவிக்கம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு 22.5% ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, ஹங்கேரி அரசு விலை உச்சவரம்புகளை நிர்ணயம் செய்தது. இதன் காரணமாக அங்கு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பான் மேற்கொண்ட நடவடிக்கைகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை என அந்நாட்டு வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.