பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும், அவர் வைத்தியசாலையிலிருந்து பணியாற்றுகிறார் எனவும் வத்திகான் இன்றைய தினம் (30-03-2023) தெரிவித்துள்ளது.
86 வயதான பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ், சுவாசப் பிரச்சினை காரணமாக, ரோம் நகரிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் நேற்றைய தினம் (29-03-2023) அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரின் உடல்நிலை முன்னேறி வருவதாக வத்திகான் தெரிவித்தள்ளது.
வத்திகான் பேச்சாளர் மெத்தேயோ புரூனி இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,
"பாப்பரசர் இரவு நன்றாக ஓய்வெடுத்தார். அவரின் மருத்துவ விடயங்கள் படிப்படியாக முன்னேறி வருகிறார். திட்டமிடப்பட்ட சிகிச்சைகளை அவர் தொடர்ந்தும் பெறுகிறார்.
இன்று காலை, காலை உணவின் பின்னர் சில பத்திரிகைகளை அவர் வாசித்ததுடன், பணிகளையும் ஆரம்பித்தார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.