காபூலில் அமெரிக்க வீரரிடம் கையளிக்கப்பட்ட குழந்தை தொடர்பில் தற்போது வெளியான தகவல்
ஆப்கான் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து பெருமளவானவர்கள் அங்கிருந்து வெளியேற முயன்றனர். இதன்போது தந்தையால் படைவீரர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட் கைக்குழந்தையை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. தலிபான் ஆப்கானை கைப்பற்றிய பின்னர் நிலவிய குழப்பத்திற்குள் மத்தியில் இரண்டுமாத குழந்தையான சொகைல் அஹ்மடி காணமல்போனது.
நவம்பர் மாதம் ரொய்ட்டர் பிரத்தியோக படங்களுடன் வெளிட்ட செய்தியை தொடர்ந்து அந்த குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. காபுலை சேர்ந்த ஹமீட்சாபி என்ற டாக்சி சாரதி விமானநிலையத்தில் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் இருந்ததை அவதானித்து அதனை தனது வீட்டிற்கு எடுத்துச்சென்று வளர்த்துள்ளார்.
இந்நிலையில் தலிபான் காபுலை கைப்பற்றியவேளை ஆப்கானிலிருந்து வெளியேறுவது தொடர்பில் நிலவிய குழப்பத்தின் மத்தியில் காணாமல் போன இரண்டு வயதுஆண் குழந்தை மீண்டும் குடும்பத்தவர்களுடன் சேர்த்துள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய வேளை ஆப்கான் மக்கள் பலர் அங்கிருந்து வெளியேறுவதற்கு முயன்றுக்கொண்டிருந்ததால் விமானநிலையத்தில் பெரும் குழப்பம் நிலவியது.
ஆயிரக்கணக்கானவர்கள் காபுல் விமானநிலையத்திற்குள் நுழைவதற்கு முயன்ற அந்த தருணத்தில் இரண்டு மாத சொகைல் அஹமடி சனநெரிசலில் சிக்கி மிதிபடுவதை தடுப்பதற்காக தந்தை அந்த குழந்தையை அமெரிக்க இராணுவவீரர் ஒருவரிடம் கையளித்துள்ளனர்.
பாதுகாப்பு வேலிக்கு மேலாக குழந்தை அமெரிக்க இராணுவவீரரிடம் கொடுக்கப்படுவதை காண்பிக்கும் புகைப்படமும் வீடியோக்களும் அப்போது ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாகியிருந்தது.
எனினும் விமானநிலையத்திற்குள் நுழைந்த குடும்பத்தினரால் தங்கள் பிள்ளையை கண்டுபிடிக்கமுடியவில்லை. அவசரஅவசரமாக அவர்கள் தங்கள் குழந்தையை தேடியபோதிலும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.
குழந்தையின் தந்தை மிர்சாஅலி அஹமட் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக பணியாற்றியவர்-அவரையும் அவரது மனைவி சுரையாவையும் நான்கு குழந்தைகளையும் அமெரிக்க படையினர் விமானத்தில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.
நான் சீருடையில் காணப்பட்ட ஒருவரிடம் எனது பிள்ளையை வழங்கினேன். அவர் அமெரிக்க இராணுவவீரராகயிருக்கவேண்டும். உள்ளே நுழைந்ததும் பிள்ளையை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என நினைத்தேன் கொடுத்தேன் என தந்தை நவம்பரில் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் நான்கு மாதங்களாக அவர்கள் தங்கள் குழந்தை எங்குள்ளது என்பது தெரியாத நிலையில் காணப்பட்டனர்.
குடும்பத்தினர் சொகைலை தேடுவது குறித்து நவம்பரில் ரொய்ட்டரில் வெளியான தகவலை தொடர்ந்து குழந்தை 29 வயது டாக்சி சாரதி ஹமீட் சபியின் வீட்டில் இருப்பது தெரியவந்தது. விமானநிலையத்தில் தரையில் குழந்தை அழுதபடி காணப்படுவதை பார்த்த அவர் அதனை தனது வீட்டிற்கு எடுத்து சென்று வளர்த்துள்ளார்.
தனது சகோதரர்களின் குடும்பத்தை விமானநிலையத்தில் விட்டுவிட்டு வரும்போது குழந்தை அழுதபடி நிலத்தில் இருப்பதை அவர் பார்த்துள்ளார். குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க முயன்று அது முடியாமல் போன பின்னர் அந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்துச்சென்று வளர்க்க தீர்மானித்துள்ளார்.
அவர்கள் பெயரை முகமட் அபெட் என மாற்றியதுடன் தங்கள் குழந்தைகளுடன் அந்த குழந்தை காணப்படும் படத்தை முகநூலில் வெளியிட்டுள்ளனர். சொகைலின் இருப்பிடம் தெரியவந்ததும்,படகஸ்தானில் வசிக்கும் குழந்தையின் உறவினர்கள் குழந்தையை தருமாறு கேட்பதற்காக காபுலிற்கு நீண்ட பயணத்தை மேற்கொண்டனர்.
எனினும் சபி குழந்தையை வழங்க மறுத்ததுடன் தங்களை அமெரிக்காவிற்கு அனுப்பவேண்டும் என கோரினார் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. ஏழு வார கால பேச்சுவார்த்தை மற்றும் சபி சில நாட்கள் தடு;த்துவைக்கப்பட்டதை தொடர்ந்து தலிபான் பொலிஸார் பிரச்சினையை தீர்த்து வைத்து குழந்தையை அதன் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
வீடியோ மூலம் அதனை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்தோம் என பெற்றோர் தெரிவித்துள்ள நிலையில், குழந்தையை அமெரிக்காவில் உள்ள பெற்றோருடன் சேர்க்குமாறு , தாம் வேண்டுகோள் விடுக்கப்போவதாக குழந்தையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.




