பிரதான அரசாங்க கட்டடத்தின் மீது ட்ரோன் தாக்குதல் ; உக்ரைன் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
கியேவின் பிரதான அரசாங்க கட்டடத்தின் மீது, ரஷ்யா நடத்திய தாக்குதல், இரக்கமற்ற தாக்குதல் என்று, யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
அத்துடன், இந்தத் தாக்குதலுக்குப் பொருத்தமான பதிலடியை அளிக்கப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தலைநகரில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது, ரஷ்யா நடத்திய தாக்குதல்களில், குழந்தை உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 44 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
எனினும், இந்தத் தாக்குதல்களில் இராணுவம் மற்றும் தொடர்புடைய உள்கட்டமைப்பை மட்டுமே தாம் குறிவைத்ததாக ரஷ்யா கூறியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பிறகு, யுக்ரைனுக்கு அமைதி காக்கும் துருப்புக்களை மேற்கத்தேய நாடுகள் அனுப்பும் யோசனைக்கு எதிராக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்த நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.