திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம் ; குழப்பத்தில் பயனர்கள்
இன்ஸ்டாகிராம் சேவை உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கியுள்ளதாக பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாக செயலியில் வைத்து குறுந்தகவல் அனுப்ப முடியவில்லை என்று பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வலைதளங்கள் செயலிழப்பது குறித்து தகவல் வெளியிடும் டவுன்டிடெக்டர் இன்று மாலை 5.14 முதல் இன்ஸ்டாகிராம் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் மெட்டா நிர்வகித்து வரும் இன்ஸ்டா செயலி முடங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
பலர் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் அல்லது அதன் தாய் நிறுவனமான மெட்டா சார்பில் இன்ஸ்டாகிராம் முடங்கியது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், செயலிழப்பு நடந்து இருப்பதாக தெரிகிறது.