ரஷ்யாவில் சேவையை தற்காலிகமாக நிறுத்திய முக்கிய நிறுவனம்!
ரஷ்யா மற்றும் அண்டை நாடான பெலாரஸில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான ஏற்றுமதியை இன்டெல் நிறுவனம் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 42-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
ரஷ்ய துருப்புக்களை முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ஆப்பிள், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் தங்களது சேவையை ரஷ்யாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.
இந்த நிலையில், ரஷ்யாவில் அனைத்துப் புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என இன்டெல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.