தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை
ஆப்கானிஸ்தானில் பெண்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தியமை தொடர்பில் தலிபான் தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பில் தலிபானின் இரண்டு முக்கிய தலைவர்களிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2021ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தலிபானின் உயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சதா மற்றும் தலைமை நீதிபதி அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோர் பெண்கள் மற்றும் சிறுமிகளை நடத்திய விதத்தின் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டனர் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் அவர்கள் பெண்கள் சிறுமிகளிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
மேலும் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் கல்வி கற்பதற்கு தடைவிதித்துள்ளதுடன் பெண்கள் பல தொழில்களில் ஈடுபடுவதற்கு தடைவிதித்தமை குறிப்பிடத்தக்கது.