டொராண்டோவில் பல வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி
டொராண்டோவில் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற பல வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கோர விபத்து மாலை 5.30 மணியளவில் கார்டினர் எக்ஸ்பிரஸ்வேயின் மேற்குப் பாதையில், யோங் தெருவுக்கு அருகே நிகழ்ந்தது.
இந்த நேரத்தில் கிடைத்த தகவலின்படி, பல வாகனங்களில் தீப்பிடித்திருந்தது மற்றும் சிலர் வாகனங்களில் சிக்கியிருப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறைந்தபட்சம் ஐந்து வாகனங்கள் விபத்தில் சிக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதில், ஒரு கார் சாலை மத்தியில் கவிழ்ந்த நிலையில் தீக்கிரையாக உள்ளது, தீ பிக்கப் டிரக்கிற்குள் பரவியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலர் வாகனங்களில் இருந்து வெளியேறி, மற்றவர்களை மீட்க முயற்சிக்கும் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு வாகன ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நால்வர் வெவ்வேறு அளவிலான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.