ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு முறை; டிரம்ப்
ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து 25% முதல் 40% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.
ஜப்பான், தென்கொரியா, மியன்மார், லாவோஸ், தென்னாப்பிரிக்கா, கஜகஸ்தான், மலேசியா, துனிசியா, இந்தோனேசியா, போஸ்னியா, பங்களாதேஷ் ,செர்பியா, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய 14 மேலதிக நாடுகளுக்கு டிரம்ப் அதிக வரிகளை விதித்தார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்திருந்தார். மேலும் வரும் 9-ம் திகதி வரை வரி விதிப்பை நிறுத்திவைப்பதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் அதிக வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும் என்றும் அதில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதாவது எந்த நீட்டிப்புகளும் வழங்கப்படாது என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.