கனடாவில் நபர் ஒருவருக்கு எதிராக 15 கொலை முயற்சி குற்றச்சாட்டு
கடனாவில் நபர் ஒருவருக்கு எதிராக 15 கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
34 வயதான மைக்கேல் கிறிஸ்டோபர் சபாட்டிஸ் என்பவருக்கு எதிராக மேலும் 15 கொலை முயற்சி மற்றும் போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நியூ ப்ரன்ஸ்விக் மாநிலம், கிங்ஸ்க்ளியர் ஃபர்ஸ்ட் நேஷன் பகுதியில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்போது, சபாட்டிஸ் தன்னை வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு, ஒரு ஆயுதத்துடன் பதுங்கியுள்ளார்.
"சற்று நேரத்திற்குப் பின், அவர் வீட்டின் ஜன்னல்கள் வழியாக போலீசாரை நோக்கி டஜன் கணக்கான துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
ஆனால், போலீசார் எந்தவொரு நேரத்திலும் பதிலடி நடத்தவில்லை," என பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு போலீஸ் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
மேலும், ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும் அவருக்கு பெரிதாக காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.