ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த சர்வதேச நீதிமன்றம்
உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனில் கடந்த பிப்ரவரி 24ம் திகதி முதல் ரஷ்யா ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.இது தொடர்பாக உக்ரைன், சர்வதேச நீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மேல்முறையீடு செய்தது. உக்ரைனில் பெப்ரவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட விசேட இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய கூட்டமைப்புக்கு சர்வதேச நீதிமன்றம் (ICJ) உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி கூறியதாவது,
ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உக்ரைன் முழு வெற்றி பெற்றுள்ளது.
ராணுவ தாக்குதலை உடனடியாக நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டது.
இந்த உத்தரவுக்கு ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும். .