சர்வதேச மாணவியை ஏமாற்றிய கனடா கல்லூரி: கல்வி கட்டணத்தைத் திருப்பித்தர உத்தரவு
கனடா கனவுகளில் வாழும் சர்வதேச மாணவ மாணவியர்கள் பலர் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இந்திய மாணவர்கள் சுமார் 700 பேர் ஏஜண்ட் ஒருவரால் ஏமாற்றப்பட்ட விடயம் கனடா மற்றும் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
இந்தியாவின் அமிர்தசரஸைச் சேர்ந்த ஷிவானி (Shivani Sharma, 29), கனடாவில் உயர் கல்வி கற்று, நல்ல ஒரு வேலையில் அமர்ந்து, தன் கணவரையும் குழந்தையையும் கனடாவுக்கு அழைத்துக்கொள்ளும் ஆசையில், கனேடிய கல்லூரி ஒன்றிற்கு விண்ணப்பித்துள்ளார்.
(Kiran Singh/CBC)
அவர் விண்ணப்பித்தது Vancouver Community College (VCC) என்னும் கல்லூரிக்கு. ஆனால், Anil Kumar Sharma என்னும் இந்திய ஏஜண்ட், ஷிவானியை வான்கூவரிலுள்ள Granville College என்னும் கல்லூரியில் சேருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி ஷிவானி 13,500 டொலர்கள் கல்விக்கட்டணம் செலுத்தி Granville கல்லுரியில் சேர, பிறகுதான் அவருக்குத் தெரிந்துள்ளது, தான் சேர விரும்பிய பாடப்பிரிவுக்கு பதிலாக, தான் வேறொரு பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
(Kiran Singh/CBC)
ஆகவே, கல்லுரியிலிருந்து விலக முடிவு செய்த ஷிவானி, தான் கட்டிய கல்விக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.
ஆனால், கல்விக்கட்டனத்தைத் திருப்பித் தர மறுத்துள்ளது கல்லூரி நிர்வாகம். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சர்வதேச மாணவர்களுக்காக குரல் கொடுக்கும் One Voice Canada என்னும் அமைப்பை அணுகியுள்ளார் ஷிவானி.
(Kiran Singh/CBC)
அந்த அமைப்பின் இணை நிறுவனரான Balraj Kahlon, இப்படி கனடாவிலுள்ள தனியார் கல்லூரிகளும் இந்திய ஏஜண்டுகள் சிலரும் இணைந்து இதுபோல் மாணவ மாணவிகளை தவறாக வழிநடத்தி வருவதாகவும், ஷிவானியின் வழக்கு அதற்கு ஒரு உதாரணம் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
இந்திய ஏஜண்ட் உதவியுடன், ஷிவானியின் ஆவணங்களிலும் மோசடி செய்யப்பட்டு அவரது கையெழுத்து, ஏற்கனவே இறந்துபோன அவரது தந்தையின் கையெழுத்து ஆகியவை மாற்றப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
(Kiran Singh/CBC)
ஆகவே, பிரிட்டிஷ் கொலம்பியாவின் Private Training Institutions Branch (PTIB) என்னும் ஒழுங்கு முறை அமைப்பு, Granville கல்லூரி ஷிவானியை தவறாக வழிநடத்தியுள்ளது என்று கூறி, ஷிவானிக்கு 10,000 டொலர்களை திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |