உக்ரைன் தலைநகரில் முடங்கிய இணைதள சேவை
உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இதனை தொடர்ந்து, இன்று உக்ரைனிலுள்ள தலைநகர் கீவ் -வில் இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என்று உக்ரைன் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்யா இன்று தாக்கக்கூடும் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ( Jelensky ) ஏற்கனவே கூறி இருந்தார்.
அதே போல் தற்போது ரஷ்ய ராணுவ வீரர்கள் தலைநகர் கீவ்-வை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதன்படி தொடர்ந்து ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் -வில் இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் கீவ் ராணுவத்தளத்தை ரஷ்யா கைப்பற்றும் முயற்சியை முறியடித்து விட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.