ஒன்டாரியோவில் பள்ளிவாசலில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது தாக்குதல்
ஒன்டாரியோ மாகாணம் ஓரோனோ பகுதியில், ஒரு பள்ளிவாசலின் முன்பக்க வாசலின், வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஏழு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
வெறுப்புணர்வு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக (Hate-Motivated Incident) டர்ஹம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதே இரவு 10:30 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது, பள்ளிவாசலுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் அதன் முன்பகுதியில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான படம் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.
“இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களுக்கு பயமும் பதற்றமும் ஏற்படுத்தும் என்பதை நாங்கள் நன்றாகவே புரிந்துகொள்கிறோம்,” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இத்தகைய நிகழ்வுகள் குறித்து அந்த பகுதியின் சமுதாய தலைவர்களுடன் நெருக்கமாக பணியாற்றி, பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புகிறோம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.