ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்!
2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பிஎல் தொடருக்கான மினி எலம் இன்றைய தினம் (19-12-2023) டுபாயில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது பல வெளிநாட்டு வீரர்கள் அதிக தொகைக்கு அணிகள் வாங்கி வருகின்றனர். இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணி கேப்படன் பாட் கம்மின்ஸ் 20.50 கோடிக்கு ஹைதரபாத் அணி வாங்கியுள்ளது.
தற்போது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இறுதியில் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. இவரது ஆரம்ப விலையாக 2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Surreal ?
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
INR 24.75 Crore ?#KKR fans, make way for Mitchell Starc who's ready to bowl in ??#IPLAuction | #IPL pic.twitter.com/E6dfoTngte