அமெரிக்கா நிபந்தனைகளை மீறுவதாக ஈரான் குற்றச்சாட்டு
ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் முற்றுகையானது போர்நிறுத்த நிபந்தனைகளை மீறும் செயல் என ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டு வார கால நிபந்தனையுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.

அந்த காலப்பகுதியில் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன.
தற்போது இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதுடன், ஈரானிய கப்பல்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை நீக்கப்படும் வரை அது மூடப்பட்டிருக்கும் என்றும் அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடற்படை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், ஹோர்முஸ் நீரிணை குறித்து ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கைகள் செல்லுபடியாகாது என்று குறிப்பிட்டுள்ளது.