பிரித்தானிய இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல்
சைப்பிரஸில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் போர் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இரண்டு முக்கிய இராணுவத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரித்தானியா, தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, சைப்பிரஸில் உள்ள பிரித்தானிய இராணுவத் தளம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலின் ஹைஃபா (Haifa) நகரை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
. ஈரானின் ஏவுகணைகளை மூலத்திலேயே அழிக்கும் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபடத் தயார் என பிரித்தானியா ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது பிரித்தானிய தளம் மீதே ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளமை சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.