ட்ரம்பின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஓமானுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈரான்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள ஈரான், ஹோர்முஸ் நீரிணைப் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான "கூட்டு தற்காலிக வழித்தடத்தை" (Joint Temporary Navigational Corridor) உருவாக்குவது குறித்தும், அந்தப் பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது குறித்தும் ஈரானும் ஓமானும் விவாதித்துள்ளன.

ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்கா தனது மத்திய கிழக்கு நாடுகளுக்கான தூதரகங்களுக்கு மீண்டும் பணியாளர்களை அனுப்பத் தொடங்கியுள்ளது.