அமெரிக்காவின் விமானத் தளத்தை தாக்கிய ஈரான் ; அதிகரிக்கும் பதற்றம்
குவைத்தில் உள்ள அமெரிக்காவின் விமானத் தளத்தை இன்று (18) அதிகாலையில் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கியதாகக் ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால், எண்ணெய் வளம் நிறைந்த அந்த வளைகுடா நாட்டில் பல வாரங்களுக்குப் பிறகு முதன்முறையாக வான் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, வான் பாதுகாப்பு அமைப்புகள், அத்துடன் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களையும் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகளை கண்காணிக்கும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு, இது குறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக, குவைத் இராணுவம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆளில்லா விமானத் தாக்குதல்களை இடைமறித்து வருவதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.