நடிகர் பாலய்யாவின் காணொளியை பதிவிட்டு ட்ரம்ப்பை கிண்டல் செய்த ஈரான்
தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலய்யா) நடித்த சண்டைக் காட்சியை பதிவிட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை ஜிம்பாப்வேவில் உள்ள ஈரான் தூதரகம் கிண்டல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது பேச்சாலும் சமூக ஊடகப் பதிவாலும் ஈரானையும் ஈரான் பிரதிநிதிகளையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறார்.

இதற்கு ஈரானியர்கள் சற்றும் சளித்தவர்கள் அல்ல. அண்மைக் காலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கிண்டல் செய்வதற்காக தென்னிந்திய படங்களை ஈரான் பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் அக்ஷய் குமாரின் வைரல் மீம் ஒன்றைப் பயன்படுத்தி ட்ரம்ப்பை ஈரான் கிண்டல் செய்திருந்தது.
இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த சண்டைக் காட்சியைப் குறிப்பிட்டு ஜிம்பாப்வேவில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்திருப்பதாவது: ஈரானை அழிப்பதாக ட்ரம்ப் பேசுகிறார்.
ஆனால், ஈரான் பாதுகாப்பற்ற நாடு அல்ல என்பது அவருக்குத் தெரியும். அவர்கள் (அமெரிக்கர்கள்) சமீபகாலமாக ஹாலிவுட்டுக்கு பதிலாக பாலிவுட் (இந்தியத் திரைப்படங்கள்) பார்க்கிறார்கள் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது என்று ஈரான் குறிப்பிட்டுள்ள பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Trump talks about annihilating Iran. But he knows Iran is not defenseless. Since we informed they have recently been watching Bollywood instead of Hollywood. https://t.co/v6Le8zkH5X
— Iran Embassy in Zimbabwe (@IRANinZIMBABWE) September 23, 2026