ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஓமான் - ஈரான் இடையே முக்கிய உடன்பாடு
ஹோர்முஸ் நீரிணை வழியே பாதுகாப்பான கப்பல் போக்குவரத்திற்கான பாதைகளை அமைப்பது தொடர்பாக ஓமான் மற்றும் ஈரானுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கூட்டு யோசனையொன்று சர்வதேச சமூகத்திடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் இஸ்மாயில் பகாய் (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.

உடன்பாடு
பிராந்திய அமைதி மற்றும் கடற்படை பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையே இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த விசேட யோசனையின் மூலம் ஹோர்முஸ் நீரிணை வழியிலான கடற்போக்குவரத்தின் பாதுகாப்பை மேலும் அதிகரிப்பதற்கும், சர்வதேச வர்த்தகத்திற்கு சாதகமான பின்னணியை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பிராந்திய கடற்போக்குவரத்து நிலவரங்கள் மற்றும் எரிசக்தி விநியோகப் பாதைகளின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.