அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஈரான்
ஈரான் நாடு அணு சக்தி பயன்பாடு மற்றும் அணு ஆயுதத்தில் இருந்து விலகி இருப்பது பற்றி அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துள்ளனர்.
இரு தரப்பு பேச்சுவார்த்தை
அப்போது, அமெரிக்காவும், ஈரானும் அணு ஆயுத பயன்பாடு பற்றி அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்துள்ளன.
ஓமனின் வெளியுறவுத்துறை மந்திரி பத்ர பின் ஹமத் அல்-புசைதி என்பவரை தலைமை மத்தியஸ்தராக கொண்டு ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அமெரிக்காவின் சிறப்பு தூதர் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இது ஆக்கப்பூர்வ முறையில் மற்றும் பரஸ்பர மதிப்பு அடிப்படையில் நடந்துள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், அணு ஆயுதம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், அணு ஆயுத பயன்பாடு குறித்த அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரோம் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறும் என ஈரான் தெரிவித்துள்ளது.