விபத்துக்குள்ளான ஈரான் ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் தொடர்பில் பகீர் தகவல்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி((Ebrahim Raisi) பயணம் செய்து விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டரை மீட்பு பணியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதேவேளை அந்த ஹெலிக்கொப்டரில் பயணம் செய்தவர்களில் எவரும் உயிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான ஹெலிக்கொப்டரில் பயணம் செய்தவர்கள் எவரும் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை எனவும் அநாட்டு அரச தொலைகாட்சிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அதேவேளை ஈரான் ஜனாதிபதி((Ebrahim Raisi) பயணம் செய்த ஹெலிக்கொப்டர் விபத்திற்குள்ளான நிலையில் மீட்;பு பணியாளர்கள் விபத்து இடம்பெற்ற பகுதியை சென்றடைந்துள்ளனர். மீட்;பு பணியாளர்கள் அந்த பகுதியிலிருந்து படத்தை வெளியிட்டுள்ளனர்.
அஜர்பைர்ஜன் எல்லையில் விபத்து
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனைகள் பலப்படுத்தப்பட்டன.
ஹெலிகாப்டரில் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் விபத்தில் பலியாகி இருக்கலாம் என்றும் உயிர்ப்பிழைக்க வாய்ப்புக்கள் இல்ல என்றும் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அஜர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவ் உடன் இணைந்து இருநாட்டு முயற்சியில் கட்டப்பட்டஒரு அணையைத் திறப்பதற்காக அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு ரைசி சென்று இருந்தார். அங்கிருந்து திரும்பி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது